Saturday, January 17, 2009

டாட்டாவும் ஆர்.எஸ்.எஸ்.ம் பங்காளிகள்! எதிர்த்துக் கேட்கும் புரட்சியாளர்கள் ஜென்ம விரோதிகள்!! - சிபிஎம் கட்சியின் ’குண்டர் கொள்கை’...

அன்பார்ந்த தோழர்களே,

டாட்டாவுக்கு ஆதரவாக மேற்குவங்க மக்களை வஞ்சிக்கத் துணிந்த போலிகள், சலீமுக்கு ஆதரவாக நந்திகிராம மக்களை நரவேட்டையாடிய போலிகள் தமது தலைமை அலுவலகமான டில்லி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கிய பாஜக-ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளை எப்படி சந்திக்கிறார்கள் என்று பார்த்தாலே புரியும் இவர்களது அரசியல் எப்படிப்பட்டது என்று.

கீழ்கண்ட பதிவினைத் தோழர் அசுரன் அவர்களது வலைப்பதிவிலிருந்து இங்கு வெளியிடுகிறேன்.

- கலைவேந்தன்.

------------------------------------------------------------------------------------


ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!

டந்த மாதம் போரூரில் RSS கும்பலிடம் அடிவாங்கியது CPMன் தமுஎச. அடிவாங்கிய கையோடு அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி போய் இன்னொரு முறை அடிவாங்கி வந்தார்கள். இதற்கு முன்பு டெல்லியில் CPM அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள் RSS கும்பல். இன்னும் பல இடங்களில் அடிவாங்கியிருக்கிறார்கள் CPM. ஆயினும் இந்த சம்பவங்களில் எல்லாம் CPM தனது பின்புறத்தையும், முன்புறத்தையும் மூடிக் கொண்டு சொறிநாயைப் போலவே வந்துள்ளது. கேட்டால் ஜனநாயகம் என்று ஒரு பதில் சொல்வார்கள். இவர்களின் சகலப்பாடி CPIயாவது RSS கும்பலின் சஹாவை எதிர்க்க ஜனநாயக முறையிலாவது போராடி அடிவாங்கியது. அந்த நடவடிக்கைகளையும் CPM செய்வதில்லை. நல்லது, இதே ஜனநாயக அனுகுமுறையைத்தான் அல்லது சரியாக சொன்னால் சொறிநாய்த்தனத்தைத்தான் எல்லாரிடமும் மேற்கொள்கிறார்களா CPM பாசிஸ்டுகள்? இல்லை நண்பர்களே.

சில நாட்களுக்கு முன்பு முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு குறித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்யப் போன ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை CPM தோழர்கள் உருட்டுக் கட்டை ஜனநாயகத்தால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள் என்பதும், அது CPM ஏரியா என்பதும், அங்கு சமீபத்தில் CPMலிருந்து பிரிந்து வந்து புஜதோமுவில் இணைந்த கடுப்பு அவர்களுக்கு உள்ளது என்பதும் கிளை செய்திகள். இதே போலத்தான் காரப்பட்டில் ம.க.இ.க மீது தாக்குதல் நடத்தி தேமுதிக நண்பர் ஒருவரை கொன்றனர் CPM காலிகள்.

புரட்சிகர அமைப்பினர் மட்டுமல்ல, சிங்கூர், நந்திகிராம், தற்போது மேற்கு வங்கபழங்குடியினர், கேரள பழங்குடியினர், பிற புரட்சிகர-ஜனநாயக அமைப்பினரை CPMஅனுகும் விதம் இப்படிப்பட்டதுதான். நமது கேள்வி ஒன்றுதான் RSSயின் அத்வானி என்ற பயங்கரவாதியை நண்பர் என்று புத்ததேவு அன்புடன் கூப்பிடுவதும், அவர்களுடன் பொது மேடைகளில் கூடிக் குலாவுவதும், RSSக்கு மட்டுமே ஜனநாயகம் என்று சொல்லுவதுமான ஒரு கட்சியை இந்துத்துவ அமைப்பின் தொங்கு சதை என்று அழைப்பதா அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டு அழைப்பதா?

RSSக்கும் இவர்களுக்குமான முரன்பாடு என்பது வோட்டு பொறுக்குவதில் மட்டும்தான். இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சிகர அமைப்புகளை கண்டுதான் CPM உண்மையில் பீதியடைந்துள்ளனர். நல்லது, உங்களது பய பீதி எங்களுக்கு புரிகிறது. உங்களுக்குள்ளேயே நீங்கள் நொறுங்க தொடங்கிவிட்டீர்கள். இனி அதை வீரியப்படுத்துவது மட்டுமே புரட்சிகர அமைப்புகளின் வேலை.

CPM கட்சியை அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே அனுகுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் தமிழகத்தின் பெரிய கட்சிகளே கூட ம.க.இ.க. விசயத்தில் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வர். ஏனேனில் ம.க.இ.க.வின் எதிர்வினை அப்படிப்பட்டதாக இருக்கு. அந்தவகையில் CPMயை சமீபத்திய தாக்குதல்களில் புரட்சிகர அமைப்புகள் அனுகவில்லை. CPM விசயத்தில் உடனடி எதிர்வினை என்பது அவர்கள் தனிமைப்பட ஏதுவானதாக இருப்பதுதான் நல்லது. அதற்கு பின்பு அவர்களை அடித்தால் அது தர்ம அடி என்பதைவிட சாவு மணி என்பதாகவே இருக்கும். கூடிய விரைவில் சாவு மணியை 'சந்திக்க'இருக்கும் சந்திப்பு போன்ற CPM அல்லக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வினவுவில் வந்த கட்டுரையை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

சொரனையுள்ள CPM உள்ளங்களை விவாதத்திற்கோ அல்லது CPMயை விட்டு வெளியே வரவோ அழைக்கிறேன்.

பய பீதி வரும் முன்னே!! CPMக்கு சாவுமணி வரும் பின்னே!!!

அசுரன்

நன்றி வினவு

____________________________________________________________


காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்திகிராம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலை வெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுகாறும் காணாத வகையில், ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் தாரக மந்திரத்தோடு, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் சகல ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளாலும், கட்சி வேறுபாடின்றி அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை, நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது வாழ்க்கையை அழித்து, அவர்களை வீதிகளில் சக்கைகளாக வீசியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்றது. நூற்றுக்கணக்கான அரசுடைமை ஆலைகள், தொழில் நிறுவனகங்கள் இழுத்து மூடப்பட்டன. அறுபதாண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குகிறது. அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளர்கள் கிளர்ந்து போராடினால்,ஹூண்டாய் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைப் போல கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி ஒடுக்கி வருகிறது. மறுபுறமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக் கையகப்படுத்தல்கள், தொழிற்சங்கச் சட்டங்களை திருத்துதல், வரிச் சலுகைகள் என முதலாளிகளின் தாள் பணிந்து, குறிப்பறிந்து வேசித்தனம் புரிகிறது.

எனவே, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இம்முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் நோக்கத்தோடு, எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை அம்பத்தூரில் ’முதலாளித்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(22-12-08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதிவசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த நமது தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம், DYFI கும்பல், தோழர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தோழர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘கண்ணியமான’ ஜோதிபாசு, சுர்ஜீத், காரத் வழி வந்த அக்குலக்கொழுந்துகள் கேட்போர் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளால் தமது அர்ச்சனையை துவங்கியுள்ளனர்.

“மரியாதையாக பேசுங்கள் தோழர்” என்று சொன்ன தோழர் ஜெயராமனை, “என்னடா தோழர்ரு, பூலுன்னுகிட்டு” (என்ன ஒரு பாட்டாளி வர்க்க பண்பாடு!) என்றவாறு கும்பலாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றி வேல் செழியனை ஒருவன் மிகக் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டை கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது. பொறுத்துக் கொண்டிருந்த இளம் பு.ஜ.தொ.மு. தோழரொருவர் உருட்டுக் கட்டையை பிடுங்கி திருப்பித் தாக்கியுள்ளார்.காயம்பட்ட நிலையிலும் அவரை தடுத்த தோழர் ஜெயராமன், “இவர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள். திருப்பித் தாக்கினால் பிரச்சினை திசை திரும்பி விடும். வேண்டாம்” எனக் கூற, அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி் சி.பி.எம் செயலாளர் ஜீவா என்பவர் தலைமையில் திரண்டு வந்த காலிக் கும்பல், நக்சலைட்டுகள் தங்களை தாக்கி விட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்தது. அந்த ஜீவாவிற்கும், இந்த ஜீவாவிற்கும் ஒரு வித்தியாசம்தான். அவர் கம்ப ரசம் குடிப்பார். இவர் எல்லா ரசமும் குடிப்பார். குடித்த கையோடு புரட்சியாளர்களை தேடிப் பிடித்து அடிப்பார். எல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நலனுக்காகவே! சப் - இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் எனும் சி.பி.எம் கைத்தடி அவர்களுக்கு ஒத்தூத, நீண்ட நேரம் வாதங்கள் நடந்துள்ளன. “திருட்டு வசூல் பண்ணி ஏண்டா எங்கத் தாலியறுக்கிறீங்க” என ஒரு பெண் எஸ்.ஐ சலித்துக் கொள்ள, “யார் திருட்டு வசூல் பண்றது, சிக்னலுக்கு சிக்னல் வசூல் பண்ணி பொழப்பு நடத்துறவங்க யாருன்னு ஊருக்கே தெரியும். நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகளுக்காக, வெளிப்படையாக நிதிவசூல் செய்கிறோம்.” என காவல் நிலையத்தில் வைத்தே செருப்பாலடித்தது போல் பதில் கூறியுள்ளார் நமது தோழர். காலை 8 மணிக்கு தாக்கப்பட்ட தோழர்கள், மதியம் 1 மணி வரை அடிபட்ட நிலையிலேயே, போலிசின் கைக்கூலித்தனத்தை எதிர்த்து வாதிட்டுள்ளனர். பின்னரும் கூட தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்து விட்டார் கைத்தடி பஞ்சாட்சரம்.

அடிபட்டால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம், நிலைமை முற்றுவதை உணர்ந்து சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த தோழர்கள், குற்றத்தை பதிவு செய்யாமல் ஓய மாட்டோம், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலிசை அம்பலப்படுத்தாமல் விட மாட்டோம் என தீர்மானகரமாக தெரிவித்துள்ளனர். அடுத்த நாளே சென்னை முழுதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொமுவில் உணர்வுள்ள சி.பி.எம் அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என அறிய வருகிறோம். “எங்க ஏரியா உள்ள வராதே!” என வெறியாட்டம் போடும் பல்லாவரம் குத்தகையாளர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். நந்திகிராமில் ‘வெளியாட்கள்‘‘ (OUTSIDERS) நடமாட்டத்தை தடுக்க, துப்பாக்கிச் சூடுகளும், குண்டுவெடிப்புகளும், கற்பழிப்புகளும். நடத்தி ஏரியாக்களை கைப்பற்றிய காலித்தனம் இங்கே எடுபடாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:

புரட்சிகரப் பொழுதுபோக்கிற்காக அமைப்பு நடத்தும் சிபிஎம்மின் கலை இலக்கிய கதம்பம் தமுஎச, அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் தனது சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்து கலை இரவொன்றை நடத்தியுள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு தோழர் சாலையில் கடை பரப்பி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 ‘குடிமகன்கள்’ - DYFI, சி.பி.எம் குண்டர்கள், போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி, காலித்தனம் செய்துள்ளனர். தள்ளுமுள்ளை தடுக்க வந்த SFI தோழர்கள், “இவர்களை ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இவர்கள் பத்திரிக்கைகள் நல்ல பத்திரிக்கைகளாகத்தானே தெரிகின்றன” என்றதற்கு, “இல்லை, இல்லை, இவர்கல் நக்சலைட்டுகள், நமது எதிரிகள்” என ஆவேசக் கூச்சல் போட்டுள்ளன சிபிஎம்மின் குடிமகன்கள். பின்னர் தோழர் பத்திரிக்கைகளை எடுத்தும் கூட ஆத்திரம் அடங்காத கும்பல், தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளது. சாராயம் குடித்து விட்டு சலம்பும் ‘தோழர்களுக்கு’ உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து பெறப்பட்ட நிதியில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் வாசனை தெரியும் என நம்புவது மடமை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, கூடியிருந்த சிபிஎம் அணிகளும், SFI மாணவர்களும் நமது தோழரிடம் பின்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வினையில்லாத வருத்தம் குற்றத்திற்கு ஒப்பாகும் என்பதை நேர்மையான சிபிஎம் அணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இம்மாதம் போயஸ் தோட்டத்தில் அம்மாவை சந்தித்து பொக்கே கொடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பணிந்து தோழர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாம் காங்கிரசு, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தேர்தல் உத்திகளாம். மதமாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை சட்டம், சேதுசமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டின் மூலம் எதிர்ப்பு என்று இந்துத்வ வாதிகளை விட அதிக வேகத்தில் செல்லும் அம்மா மதசார்பற்ற சக்தியாம். மேலும் தேர்தல் முடிந்து அம்மா பா.ஜ.க பக்கம் சாயலாம் என்பதையும் “தோழர்கள்” உணர்ந்திருக்கிறார்களாம். அதேபோல தேர்தலுக்கு பின் சி.பி.எம் கட்சி மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு ஆதரவு தருவதையும் தோழர்கள் மறுக்கவில்லை. இடையில் தமிழ்நாட்டில் இரண்டு சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி கொடுக்கும் அரசியல் விளக்கத்தைப் பார்த்தால் சந்தர்ப்பவாதத்தின் இலக்கணத்தை புரிந்து கொள்ளலாம். போயஸ் தோட்டத்தின் ஆசியில் போலிக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை முடிப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். தலைமையே இப்படி பிழைப்பு வாதத்தில் புரளும் போது அணிகள் ரவுடித்தனம் செய்வதில் என்ன வியப்பு? இல்லையென்று மறுக்கும் நேர்மை உள்ள சி.பி.எம் அணிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், புரட்சிகர அமைப்புக்களில் அணிதிரளுங்கள், இல்லையேல் வரலாற்றில் போலிக்கம்யூனிஸ்டுகள் என்ற பட்டத்தோடு நீங்கள் இடம் பெறவேண்டியிருக்கும்.
Related Articles:


8 comments:

வினவு said...

வாழ்த்துக்கள் தோழர்!

சி.பி.எம் கட்சியில் மிச்சம் மீதியுள்ள நேர்மையான தோழர்களை வென்றெடுக்க உங்கள் தளம் உதவட்டும்!

தோழமையுடன்
வினவு

வினவு said...

தோழர்,

வோர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்.

தோழமையுடன்
வினவு

கலைவேந்தன் said...

வருகைக்கு நன்றி தோழர் வினவு. வோர்ட் வெரிபிகேஷனைப் பற்றித் தெரியவில்லை. தொடர்ந்து முயற்சிக்கிறேன். தோழர்.

கலைவேந்தன் said...

காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் ம;"சள் என்பார்கள். அது உங்களைப் போன்ற ம.க.இ.க. காரர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால்தான் முற்போக்கு மற்றும் விடுதலைக் கவியான பாரதி உங்களுக்கு கசக்கிறார். கம்பராமாயணம் படிப்பதாலேயே ராமர் பாலம் இருக்கிறது என்று கூறவேண்டும் என்ற உங்களது சிந்தனை அபாரமானதுதான். மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கட்சியை நடத்துகிற குழுவினரிடம் இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. சி.ஐ.டி.யு. ஆயுத பூஜை கொண்டாடாது. ஆனால் சி.ஐ.டி.யு.வில் உறுப்பினராக உள்ளவர்கள் கொண்டாடினால் அதனைத் தடுக்காது. அது ஒரு வெகுஜன அமைப்பு. அதில் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் பங்கேற்பர். 30 ஆண்டுகளாக கிணற்றுத் தவளையாக கத்திக் கொண்டிருப்பதால் புரட்சி நடக்காது அன்பரே!

வெற்று அலம்பல்களை விவாதம் என்பதா? வேடிக்கையாக இருக்கிறது கலைவேந்தன். கேட்ட கேள்வியையே ஊர்ல இருக்கிற அத்தனை தளத்திலும் பதிவும் உங்களது வெட்டி வேலை சிறப்பானதுதான். ஆனால் இதுவரை தங்களது கட்சி திட்டம் குறித்தும் அதன் செயல்பாடும் குறித்து மட்டும் வாயே திறப்பதில்லையே! அனானி கட்சியல்லவா அப்படித்தான் இருக்கும். அதுவும் நீங்கள் இணையத்தின் மூலமே ஆட்சியைப் பிடிப்பதற்கு பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்தானே. அதுவும் கார்ப்பரேட் விளம்பரதாரர்கள் போல!

நண்பர் சந்திப்பு அவர்களுக்கு,

என்னுடைய சில பின்னூட்டங்களை புறக்கனித்ததோடு, இதுவரை பதியப்பட்ட வற்றுக்கும் பதிலளிக்க வக்கற்றுக் கிடந்ததோடு, வெறும் பிதற்றல்களாலான உங்களுடைய மேற்கண்ட பதில்கள் உங்களின் மீது பரிதாபத்தையே வரவழைக்கின்றன.

நேர்மையாக, தெளிவாக அரசியல் விவாதங்கள் உங்களோடு செய்யலாம் என்கின்ற எனது நம்பிக்கை உங்களுடைய இழிவான வசவுகளால், அவதூறுகளால் பொய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.

இணையத்தில் விவாதிப்பது எனக்கொன்றும் முழுநேர வேலையல்ல. ஆனால், அதையே ஒரு வேலையாக ஊதியம் பெற்றுக் கொண்டு செய்துவரும் நீங்கள் அந்த வேலைக்கு எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

மகஇகவை இன்னும் சற்றுக் கூடுதலாகவேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால், தயவு செய்து பதியப்பட்ட கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள். என்பதை பனிவோடு ஆனால் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடைய பதில்கள் உங்களை அம்பலப்படுத்துவதைவிடவா எமது கேள்விகளும் எங்கள் தோழர்களது இணைய செயல்பாடுகளும் அம்பலப்படுத்திவிடப் போகிறது. இங்கு நீங்கள் பதிந்திருக்கின்ற பதில்கள் எனும் அசிங்கத்தை உங்கள் த.மு.எ.ச. குழுமத்தில் உள்ள அனைவருக்கும் மின்னஞ்சலில் என்னால் தெரிவிக்க முடியும். தெரிவிப்பேன்.

தோழர் தளபதியின் கேள்விகளில் உள்ள எதார்த்தத்தை, “தயவு செய்து பதிலளியுங்கள்” என்ற மன்றாடலை மேற்கண்ட உமது மொன்னைத்தனமான பதில்களால் ஏளனம் செய்திருக்கிறீர்கள்.

உங்களுக்காக வருந்துகிறேன்.

- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

சந்திப்பு சொன்னது: காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் ம;"சள் என்பார்கள். அது உங்களைப் போன்ற ம.க.இ.க. காரர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால்தான் முற்போக்கு மற்றும் விடுதலைக் கவியான பாரதி உங்களுக்கு கசக்கிறார். கம்பராமாயணம் படிப்பதாலேயே ராமர் பாலம் இருக்கிறது என்று கூறவேண்டும் என்ற உங்களது சிந்தனை அபாரமானதுதான்.

இதற்கான எனது பதில்களும் சில கேள்விகளும்: ராமர் பாலம் பற்றி இங்கு கமெண்ட் பதிந்துள்ள நண்பருக்கும் மகஇகவுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும், அவரது அந்த பதிலை நான் வரவேற்கிறேன்.

அந்த பதில் சொல்ல வருவது, ராமர் பாலத்தை எதிர்க்கக் கூடாது என்பதல்ல, போலிகம்யூனிச கட்சியின் ராமாயண ஆதரவு எனும் கேலிக்கூத்தைச் சரியா என்று கேள்வியெழுப்புவதுதான்.

பாரதிக்கு ‘முற்போக்கு, விடுதலைக் கவி’ என்று பட்டம் சூட்டுவதற்கு, உங்களுக்கு ஏதேனும் தகுதியிருக்கிறதா? “சிபிஎம் நடத்தப் போகும்(!) ‘மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு’ (எனும் பம்மாத்து கேவலத்திற்கு) தலைமை தாங்குகிறவர் பார்ப்பன சாதியில் பிறந்தவராக இருந்தால் பூநூல் அணிந்து கொள்வது தவறா சரியா?” என்கிற எமது தோழர் ஒருவரது கேள்விக்கு பதில் கேட்டால், பதில் சொல்லப் பயந்து இங்கு வந்து பாரதிக்கு ‘முற்போக்கு’ பட்டத்தை வாறிவழங்கிக் கொண்டிருக்கிறீர்களே! இது வேடிக்கையிலும் வேடிக்கையல்லவா?


- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

சந்திப்பு திருவாய் மலர்ந்தருளியிருப்பது(!): மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கட்சியை நடத்துகிற குழுவினரிடம் இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

எனது பதில்: எதைச் சொல்கிறீர் சந்திப்பு?

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி ஓட்டுக் கேட்க வருவதால் மக்கள் காறி உமிழ்ந்து விரட்டியடிக்கிறார்களே, அதைத்தானே மேலே ‘மக்களிடமிருந்து தனிமைப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்?

‘புரட்சி’த்தலைவி ஜெயலலிதாவோடு நீங்கள் செய்கின்ற புரட்சி எந்த அளவுக்கு மக்கள் ஆதரவோடு நடக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். மக்கள் ஆதரவை விட்டுத் தள்ளூங்கள் உங்கள் கட்சியில் இருக்கும் அணிகளின் முழுமையான ஆதரவாவது அதற்கு இருக்கிறதா என்பதை நேர்மையாகப் பரிசீலித்துவிட்டு ‘தனிமைப் பட்டது’ யார் என்று விவாதிக்க வாருங்கள்.

குறிப்பு :- இங்கு பதியப்படுகின்ற ஒவ்வொரு பின்னூட்டமும் உங்களால் நேர்மையாக வெளியிடப்பட வேண்டும். இல்லையென்றால் இவ்விசயங்கள் யாருக்கெல்லாம் தெரியக் கூடாது என்று கருதி நீங்கள் இருட்டடிப்பு செய்கிறீர்களோ அவர்களுக்கு நேரடியாக இன்றைக்குள் சென்று சேரும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

சந்திப்பு திருவாய் மலர்ந்தருளியது(!): சி.ஐ.டி.யு. ஆயுத பூஜை கொண்டாடாது. ஆனால் சி.ஐ.டி.யு.வில் உறுப்பினராக உள்ளவர்கள் கொண்டாடினால் அதனைத் தடுக்காது. அது ஒரு வெகுஜன அமைப்பு. அதில் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் பங்கேற்பர்.

எனது பதில்: இந்த அளவுக்கு கீழிறங்கி விவாதிக்க வேண்டிய இழிநிலையினை எண்ணி வருத்தப்பட்டாலும் வேறு வழியின்றி இங்கு சில கருத்துக்களைப் பதியவேண்டியிருப்பதால் தொடர்கிறேன்.

”சி.ஐ.டி.யூ. கொண்டாடாது அதன் உறுப்பினர்கள் கொண்டாடலாம்” என்கிற உமது பதிலை தயவு செய்து மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். இதைவிடவா நான் எழுதுகின்ற விசயங்கள் உங்கள் அரசியலை அசிங்கத்திற்குள்ளாக்குகின்றன?

சி.ஐ.டி.யு. என்றால் என்ன? அதன் உறுப்பினர் யாவர்? சி.ஐ.டி.யூ.வுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏதாவது தொடர்பிருகிறதா? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைக் கேட்கவேண்டிய அசிங்கத்திற்குள் என்னைத் தள்ளிவிட்டது யார்?

பதில் கிடைக்குமா?


- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

https://www.blogger.com/comment.g?blogID=7005694380389306741&postID=8553811090326028214&page=1

இது http://indiancommunisthistory.blogspot.com/ என்கிற தளத்தின் (நெருப்பின் சுவடுகள்) நான் பதிந்துவைத்தது. ஏதாவது பதில் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

Post a Comment