Wednesday, January 28, 2009

ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…


அன்பார்ந்த தோழர்களே!

தலைமையின் தொடர்ச்சியான துரோகங்களும், அதனையும் மீறிய அணிகளின் தியாகங்களும் நிரம்பியதுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு. வீரத் தெலுங்கானா போராட்டம் முதல் பாசிச இந்திராவின் அடக்குமுறையாட்டம், நக்சல்பரி, சமீபத்திய சிங்கூர், நந்திகிராம் வரை இந்திய கம்யூனிச இயக்கம் தனது போலித்தனத்தைப் பறைசாற்றியே வருகிறது.

முதலாளித்துவக் கட்சிகளுடனும், டாட்டா,சலீம் போன்ற இந்திய-அந்நிய தரகு முதலாளிகளுடனும் எந்த விதமான சமரசத்திற்கும் தயாராக இருக்கும் இக்கும்பல் வரலாறு நெடுகிலும் இதுபோன்ற புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே இயங்கிவந்துள்ளது.

நக்சல்பரி எழுச்சியின் போது போலிஸ்துறையைக் கையில் வைத்திருந்த நம்ம மூத்த ‘காம்ரேடு’ ஜோதிபாசு அவர்கள்தான் தமது சொந்த கட்சியினைச் சார்ந்த தோழர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அதன் எச்ச-சொச்சங்கள்தான் இப்போதும் நந்திகிராமத்தில் தனது அரசை எதிர்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் ‘நக்சல்கள்’ என்று முத்திரைகுத்தி தனது குண்டர்களை ஏவிவிட்டு பழிதீர்த்துக் கொள்கிறது. இதனை நாம் வலது சந்தர்ப்ப வாதம் என்று வரையறுக்கிறோம்.

இந்திய மாவோயிஸ்டுகள் குறித்து பேச வேண்டுமென்றால், தமது இடது தீவிரவாத செயல்தந்திரத்தை அவர்கள் பரிசீலிக்கவும் தயாராகாத் நிலையில்தான் இருந்து வருகின்றனர். இதனை விளக்கும் விதமாக தோழர் ஒருவர் தனது சூன்யம் என்கிற வலைதளத்தில் பதிந்துள்ள கட்டுரை ஒன்றினை இங்கே பதிவிடுகிறேன் (அனுமதி பெறாமலேயே....).

போலி கம்யூனிஸ்டுகள் எமது அமைப்பின் பெயரிலேயே ஒரு வலைதளத்தைத் தொடங்கி அவதூறூகளை நிரப்பி வருகின்ற சூழலில் இக்கட்டுரையினை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நட்புடன்,
- கலைவேந்தன்.

சாரு மஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் (1965 - 67)

ஜனவரி 27, 2009

சாரு மஜூம்தார்… இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமேஅல்லஇந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள்அடங்கியிருக்கின்றனஇந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும்,எழுச்சியும் சாதாரணமானவை அல்லஅதிகாரத்துக்கு எதிரானகுரலாகவும்தன்மானம் - சுயமரியாதைக்கு அர்த்தமாகவும்,உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும்அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது.சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்தநாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது.

நக்சல்பாரி - என ஆளும்வர்க்கமும்பன்னாட்டு முதலாளிகளும்இன்று மட்டுமல்லஇனி எத்தனை நூற்றாண்டுகளானாலும்பயத்துடன் உச்சரிக்கப் போகிறார்களே… அந்த ‘நக்சல்பாரிஎன்ற சொல்லுக்கு பின்னால் நிற்கும்இருக்கும் மனிதர்இந்தசாரு மஜூம்தார்.

1968ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து ஒரு குரல் சீறி வெடித்ததுஅந்தக் குரல் சாருமஜூம்தாருடையது. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த இவரது குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை. பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்… என அதிரடியாக சாரு அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

சரிஅழித்தொழிப்பு நடவடிக்கையில் சாரு மஜூம்தார் ஏன்இறங்கினார்இப்படியொரு முடிவுக்கு அவர் வர என்னகாரணம்?

1967 மார்ச் 2ம் தேதி. அதே நக்சல்பாரி கிராமம். அங்குதான் விமல் கேசன் என்ற ஆதிவாசி இளைஞர் வசித்து வந்தார். தனது நிலத்தை விமல் கேசன் உழுவதற்கு அந்தப்பிரதேச நீதித்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்தக்கிராம நிலச்சுவாந்தர்கள், நில உரிமையாளர்கள், விமல் கேசனை தனது நிலத்தில் உழுவதற்கும், உரிமை பாராட்டவும் அனுமதிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர்.

இதைப் பார்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் கொதித்து எழுந்தார்கள். ஏற்கனவே அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சாரு மஜும்தார், தீவிரமான ஒரு கிளர்ச்சிக்கு தயாரானார். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விமல் கேசனுடைய நிலத்தை மட்டுமல்ல, தாங்கள் பறிகொடுத்த அனைத்து நிலங்களையும் சாரு மஜும்தாரின் தலைமையில் நக்சல்பாரி மக்கள் மீட்டெடுத்தனர்.

கிளர்ச்சி 72 நாட்கள் தொடர்ந்தது. ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒன்பது விவசாயிகள் அல்லது ஆதிவாசிகள் இந்தக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர். நக்சல்பாரி மக்களின் அந்தக் கிளர்ச்சியே பின்னாட்களில் நிலச்சுவாந்தர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் பெயராகவும் அமைந்தது.

இப்படித்தான் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்‘ தோன்றியது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22ம் தேதிகல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட காலமக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கிஇன்றுடன்40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.

அவரது தலைமையின் கீழ் தமிழகத்திலும் புரட்சிகர மா - லெ குழு தோன்றியது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், தடங்களையும் அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

சாருமஜூம்தார் தமிழகத்துக்கு 2வது முறையாக வந்துஅழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்தபிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்படகட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால்வேட்டையாடப்பட்டார்நக்சல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும்இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்தோழர்கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள்சாருமஜூம்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையைவிட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்றார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட வேலைதொழிற்சங்கத்தின் ஆணிவேராகஅல்லவா தோழர் கோதண்டராமன் விளங்கினார்?தொழிற்சங்கத்தை கட்டுவது எளிதான விஷயமல்லஎன்பதுஅமைப்பை கட்டுபவர்களுக்கு தெரியும்அப்படி கட்டி எழுப்பியசங்கத்தை அப்படியே போட்டுவிட்டு தலைமறைவுவாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்பின்னர்காவல்துறையினரால்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்அன்று மட்டும் அவர் அழித்தொழிப்பு செயலில் இறங்காமல்,தன்னிடமிருந்த தொழிற்சங்கத்தை வைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால்..? பரவசமான கனவுதான்.ஆனால்நடக்காமலேயே போய்விட்டதுஅவரால் கட்டப்பட்ட தொழிற்சங்க அமைப்பை அதன்பின், வலது - இடது போலி கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி சின்னாபின்னமாக்கிவிட்டார்கள்.சரிஅது முடிந்த கதைதமிழக நக்சல் தடத்துக்கு வருவோம்.

தோழர் அப்புவை தொடர்ந்து சீராளன்பாலன்கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில்பலியாகி விழுந்தார்கள்எம்.ஜி.ஆர்ஆட்சிக்காலத்தில்காவல்துறை அதிகாரியான தேவாரம் தலைமையில்நக்சல்பாரிகள் நரவேட்டையாடப்பட்டார்கள்இதில்புரட்சியாளர்களைவிடபல அப்பாவி பொதுமக்கள்தான்பலியானார்கள். பிடிபட்ட புரட்சியாளர்கள் காவல்நிலையத்தில் சந்தித்த கொடுமைகளை எழுத்தில் வடிக்க முடியாது. ரத்தத்தில் தோய்ந்த வரலாறு அது.

தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம்.

இப்படியான கொந்தளிப்பும், அடக்குமுறையும் ஆளும்வர்க்கத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட சூழலில், நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார், 1972ம் ஆண்டு காவல்துறை மோதலில் கொல்லப்பட்டார். அவருடன் நக்சல்பாரி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆளும் வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதன் பிறகுதான் நடந்தது என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி அது அறியவில்லை. கிள்ளுக்கீரையாக நக்சல்பாரிகளை பிடுங்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. ஆனால், பிடுங்கி எறியவும், வெட்டிப் போடவும் நக்சல்பாரிகள் ஒன்றும் கோழைகள் அல்லவே. அவர்கள் போராளிகள். இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி, சமூக மாறுதல் ஏற்படும் வரை, சோஷலிசம் உருவாகும் வரை இந்த நக்சல்பாரி விதை முளைத்து கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும்.

மார்க்ஸிய - லெனினிய கொள்கையே புரட்சிக்கான வழி. அதில் எப்போதுமே யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வழிமுறைகளில் மாற்றம் தேவை என்ற சுய பரிசீலனைக்கு, சாரு மஜூம்தாரின் மறைவுக்கு பிறகு, மா - லெ குழுக்கள் வந்தன. அதனால்தான் அவரது அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.

‘நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள். விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள். பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள். நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ, அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள். முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு. ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…’

என நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு எஸ்..சிஎன்றழைக்கப்படும் மார்க்ஸிய - லெனினிய சித்தாந்தஅடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியைநிறுவினார்கள்ஆயுதங்களை சுமந்து திரியும்சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய்மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டஆரம்பித்தார்கள்அணி திரட்டியும் வருகிறார்கள். மகஇக இந்த வழிமுறையுடன்தான் (நான் அப்படித்தான் நம்புகிறேன் - சூன்யம்) வீறுநடை போடுகிறது.

என்றாலும் தோழர் சாரு மஜூம்தார் என்றுமே மரியாதைக்கு உரியவர். அப்படிப்பட்டவரின் புகழ்பெற்ற எட்டு ஆவணங்களை ‘மனிதன்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள் இன்றும் பொருந்தக் கூடியதா என்ற கேள்விஎழுவது இயல்பானதுதான்ஆனால்என்றைக்குமே ஒருவரலாற்று கட்டத்தில் முன்வைக்கப்படும் ஆவணங்கள் எல்லாக்காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் என்று யாராலும் கூறமுடியாதுஇதை நினைவில் கொள்வது நல்லது. இன்று புரட்சிகரஅணிகளில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.ஆயினும் ந்த ஆவணங்களிலுள்ள சில விஷயங்கள் இன்றும்பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உதாரணாமாகஇந்தியா ஒரு அரைக்காலனிய - அரைநிலவுடமை நாடு என்ற வரையறுப்பும்இதுபோன்ற நாடுகளில்பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் -விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள்ஜனநாயகப் புரட்சியே சாத்தியம் என்ற துணிபும்அது நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் மூலம் நிறைவேற்றப்படும்என்ற வழிகாட்டலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே.

அதேபோல் இந்திய அரசமைப்பு மேலும் மேலும்பாசிசமயமாக்கப்பட்டு வரும் சூழலில்சமுதாய மாற்றத்துக்குதலைமை தாங்க வேண்டிய கட்சி ரகசியமாக செயல்படுவதுஇன்றியமையாததாகும்அந்தவகையில் ரகசிய கட்சியின்அவசியத்தை வலியுறுத்திய சாரு மஜூம்தாரின் கருத்துஇன்றைக்கும் பொருந்தும் அல்லவா?

நக்சல்பாரிகள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணங்கள் பயன்படும்.

‘வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு ஆவணங்கள் (1965 - 67)’, சாரு மஜூம்தார், மனிதன் பதிப்பகம், வரகூர், அண்ணாமலைநகர், சிதம்பரம் - 608002.பக்கம்: 96, விலை: ரூ: 50



No comments:

Post a Comment