Wednesday, January 28, 2009

மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது.....


அன்பார்ந்த தோழர்களே!

பெயரில் மட்டும் கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் வைத்திருக்கும் போலி கம்யூனிச கட்சியான சி.பி.எம்., தேசிய இனப்பிரச்சினையில் இந்து-பார்ப்பனியக் கண்ணோட்டத்தையே கடைபிடித்துவருகிறது. பொதுவாக இப்போலிகளின் தேசியப் பார்வை என்பது இந்திய முதலாளித்துவ ஓட்டுப் பொறுக்கிக் கும்பலான இதர கட்சிகளைப் போன்றே இருந்துவருகிறது. இதனை அம்பலப்படுத்தும் விதமாகவும், சென்ற ஜனவரி’26 அன்று ”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்று வின்னதிர முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தையும் விளக்கும் விதமாகவும் பதியப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையினை இங்கே பதிகிறேன்.

நட்புடன்,
-கலைவேந்தன்.

ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்!
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!


சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று  துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.


ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன.  கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி  கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை  போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான  இந்தியாவை கண்டித்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில  இங்கே ,கண்டிப்பாக  பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். 


போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம். முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு  இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான்  தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம்  தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட  தேசியத்தை அச்சம்பவத்தை   நேரில் கண்டவர் என்ற முறையில்  பெருமையோடு   பதிக்கிறோம்.


சனவரி-26,காலையில் பனகல் பார்க் நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும்  ,அவர்தம் காலில் கிடக்கும்ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி  காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில்  வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.

 

 

ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு  பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு  வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும்  தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள் அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில்  வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.

“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.

 

 பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.


கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள்  இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட  பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”

ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு  புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

 

அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”

 

இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,

 

அம்முழக்கங்களால்  எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள்  உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர்  செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.


நன்றி: தமிழரங்கம் இணைய தளம்.

 


 


No comments:

Post a Comment