Tuesday, January 13, 2009

பாசிஸ்ட் சி.பி.எம்.கட்சியும்! லெனின் சொல்லும் ஜனநாயகப் புரட்சியும்!!....

அன்பார்ந்த தோழர்களே!

பொலிட்பீரோவிலிருந்து கட்சியின் கடைமட்ட அணிகள் வரை உள்ள அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய சித்தாந்த அடிப்படைகளை அடியோடு துடைத்தெறிந்துவிட்டு அந்த இடத்தில் தமது பிழைப்புவாத, சந்தர்ப்பவாத நடைமுறைகளைப் பதிவிட்டு போலிகள் நடத்திவரும் அரசியல் அனைவருக்குக்ம் தெரிந்ததே. 

இவர்கள் சித்தாந்தத்தோடு எப்படி முரண்படுகிறார்கள் என்பதனை தோழர் அசுரன் தமது பானியில் ஆப்பறைந்திருக்கிறார். அதனை இங்கே வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

- கலைவேந்தன்.

-------------------------------------------------------------------------------------

CPM
 போன்ற போலி கம்யுனிஸ்டுகள் மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு கேரளாவில் பில்லி சூனியம் வைத்து உள்கட்சி எதிரிகளை ஒழிப்பதிலும் மேவாவில் டாடா சலீம் கும்பலுடன் சேர்ந்து சொந்த மக்களை சுட்டு சாகடிப்பதிலும் கைதேர்ந்த பாசிஸ்டுகளாகிவிட்டனர்.(முக்கிய மேட்டர படிக்க விரும்புகிறவர்கள் இங்கிருந்து ஒரு நாலஞ்சு பத்தி கீழே போயி நேரா லெனின், மார்க்ஸ் இவிங்களோட உரையாடுங்க - இடையில நானும் வருவேன்).

பாசிஸ்டுகளுக்கு மார்க்ஸியத்தை திரிப்பது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தையல்ல. அப்படி ஒரு திரிப்புதான் கார்ப்போரேட் பார்ட்டி ஆப் டாடாயிஸ்டு அதாவது CPM கட்சியின் இணைய பிரசங்கியினுடைய சமீபத்திய பதிவ. அது பிரபாத் பட் நாயக்னு ஒருத்தர் எழுதுனதாம். அதப்பத்தி நமக்கு கவலையில்ல. ஆனா இதுக்கு முன்ன நடந்த எந்தவொரு விவாதத்திலும் நமது எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லாத சந்திப்பு ஏதோ அவரது கட்சி எல்லா விவாதங்களுக்கும் பாய்ந்து வந்து பதில் சொல்வது போல போலி ஆவேசம் காட்டியுள்ளதுதான் மகா காமெடியாக இருக்கிறது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் மக இக காட்டுக்குள்ள உக்காந்து கட்சி நடத்துறாங்ககிறதும், அவர எதிக்குறவங்க எல்லாம் நக்ஸலைட்டுகள் என்பதுமான டேப்ரிக்காடர் மேட்டர்தான். அவருக்கு ஒரே ஒரு ப்ளாஷ்பேக் ஒட்டினால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. அந்த சாம்பிளுக்கு இங்க போயி பார்க்கலாம்: கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

அரசும் புரட்சியும் புத்தகத்தில் இது போன்ற சமூக ஜனநாயக தேசிய வெறியர்கள் (அதாவது பாசிஸ்டுகள்) மார்க்ஸியத்தை திரிப்பது குறித்து லெனின் வெகு விமரிசையாகவே அம்பலப்படுத்தியுள்ளார். அவரது ஒவ்வொரு வரிகளும் இன்றைக்கும் வெகு பொருத்தமாக இருக்கின்றன. என்ன செய்ய ஒரு வரலாற்று கட்டத்தில் ஒரே விதமான கதாபாத்திரங்கள்தான் மேடையில் நடமாட வேண்டியிருப்பது வரலாற்றின் கட்டளை. லெனின் காலத்தில் அலைந்த அதே, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகளாகிய சந்தர்ப்பவாதிகள் செய்தது போலவே இன்றைய CPM உள்ளிட்ட புல்லுருவி பாசிஸ்டுகளும் செயல்படுகிறார்கள். என்ன ஒரே வித்தியாசம் CPM போன்ற பாசிஸ்டுகள் அன்றைய சமூக தேசிய வெறியர்கள் செய்த அளவுக்கூட மார்க்ஸியத்தை மேற்கோள் காட்டுவதில்லை அவ்வளவுதான். இனி லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்க்கு முன்பு கார்ப்போரேட் கட்சியின் இணைய பிரசங்கியினுடைய தளத்தில் வந்துள்ள கட்டுரையில் சில வரிகளை பார்த்து விடலாம்.

//ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். //

அதென்ன பொல்லாத சமூக புரட்சி? நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

மார்க்ஸ் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கையிலேயே தெளிவாக சொல்கிறார் - சிறு உடைமையாளர்களின் சொத்துடைமையை அழிப்பதா கம்யுனீஸ்டு புரட்சியின் நோக்கம்? இல்லை அதை ஏற்கனவே முதலாளித்துவம் செய்து வருகிறது என்று(மாறாக சொத்துடைமையின் சமூக தன்மையை மாற்றுவதுதான் கம்யுனிஸ்டுகளின் நோக்கம்). ஆக இங்கு கார்போரேட் பார்ட்டி ஆப்பு டாடாயிஸ்டு கட்சி கம்யுனிஸ்டு கட்சியாக செயல்படுகிறதா அல்லது முற்றிய முதலாளித்துவம் AKA பாசிசம் ஆக செயல்படுகிறதா என்பதை படிப்பவர்களின் புரிதலுக்கே வீட்டு விடுகிறேன். ஏனெனில் அவரது கட்சி சிறு உடைமையாளர்களீன் சொத்தை அழித்து டாடா சலீம் சமூகத்தின் சொத்தாக மாற்றி வருகிறார்கள் அதனால்தான்.

இந்த வரிக்கு பிறகு அவர் கொடுத்துள்ளதெல்லாம் ப்லப்பல்ப்லப்லல்லா.....தான். அவற்றை சுருக்கமாக தொகுத்து கட்சி கொள்கை என்று ஒரு லிஸ்டு கொடுத்துள்ளார்.

//உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
//

இதில் ஒன்றில் கூட மேவாவுல் சரி, கேரளாவும் சரி மற்றெந்த மாநிலங்களையுவிட பின்தங்கி தவழ்ந்து கொண்டுதான் உள்ளன. வர்க்கச் சேர்க்கையை வலுப்படுத்துவது என்கிற அம்சத்தில் மட்டும் அவர்கள் சிறிது முன்னேறிச் சென்றுள்ளனர். அவை மூறையே, மேவாவில் டாடாயிஸ்டுகளுடன், சலீம்களுடன் கூட்டணீ வைத்து மக்கள் ஜனநாயகத்தை ஒடுக்கியதும். கேரளாவில், மேவாவில் பார்ப்ப்னியத்துடனும், மூடநம்பிக்கை பில்லி சூனியத்துடனும் ஒட்டி உறவாடி வருவதுமே ஆகும். நல்ல வர்க்க கூட்டணி. சரிதான். வேற மாதிரி நடந்திருந்தாதான் ஆச்சரியம்.


//சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். //

இந்த அம்சத்திலும் கூட பாசிஸ்டு கட்சியினர் சிறிது முன்னேறியுள்ளனர். அதாவது முதலாளிகளின் போட்டியை பயன்படுத்தி அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது என்கிற அம்சத்தில் சிங்கூர் விளை நிலங்களை அடி மாட்டு விலைக்கு புரொக்கரிங் செய்து கொடுத்ததும் அப்படி குறைந்த விலைக்கு வாங்க வசதியாக அரசாங்கமே டாடாவுக்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நஸ்டத்தில் கடன் கொடுத்ததும் நிகழ்ந்துள்ளது. இங்கு யாருடைய அதீத கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதற்க்கு நந்திகிராம் சாட்சியாக உள்ளது. யாருடைய மூலதனம் யாருடைய பாக்கெட்டு போனது என்பதற்க்கு சிங்கூர் உதாரணமாக இருக்கிறது.

சரி உண்மையில் லெனின் இந்த பாசிஸ்டுகள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

அதாவது அரசும் புரட்சியும் (அத்தியாயம் 1, 4வது தலைப்பு - அரசு "உலர்ந்து உதிர்வதும்" பலாத்கார புரட்சியும்)

"கருத்து வளத்தில் சிறந்து விளங்கும் ஏங்கெல்ஸின் இந்த வாக்குவாதத்தில் ஒரேயொரு விவரம் மட்டும்தான் நவீன கால சோசலிஸ்டு கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம் பெறுகிறதெனெ திடமாய் கூறலாம்............ அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்னும் அராஜக கோட்பாட்டுக்கு மாறாக மார்க்ஸின் கருத்துப்படி அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்கிற ஒரேயொரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்ஸியத்தை இந்த அளவுக்கு வெட்டி குறுக்குவது என்பது மார்க்ஸியத்தை சந்தர்ப்பவாதமாக சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல".

இப்படி நான் சொல்லல சாமி. சாட்சாச் லெனின் என்ற நக்ஸலைட்டுதான் இப்படி சொல்லிறுக்காறு. இங்க நம்ம பிரபாத் கூட அதே சந்தர்ப்பவாத திரிபு வேலையத்தான் செய்யுறாரு(அரசு உலர்ந்து உதிரும் என்பதை மட்டும் வைத்து தனது வாதத்தை கட்டியமைத்துள்ளார்).

அப்படியெனில் உலர்ந்து உதிருவது என்கிற இடத்தை பேசும் போது ஏங்கெல்ஸ் அராஜகவாதிகள் தவிர்த்து வேறு யாரை சந்தர்ப்பவாதிகள் என்று அம்பலப்படுத்துகிறார்? அது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம பாசிஸ்டு கட்சியான CPM கும்பலைத்தான் அவர் அம்பலப்படுத்துகிறார்:

"சுதந்திர மக்கள் அரசு என்னும் தொடர் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் - கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்த அளவுக்கு அதன் பிரயோகம் நியாயமென்பதையும், முடிவில் விஞ்ஞான வழியில் அது எவ்வளவு குறைபாடானதென்பதையும் - அராஜகவாதிகளுடைய கோரிக்கையாக சொல்லப்படும்....." - ஏங்கெல்ஸ் (அதே புத்தகம் அதே பகுதி).

இங்கு பாசிஸ்டு CPM கட்சியினர் அராஜகவாதி குறித்த பகுதிகளை மட்டுமே பேசுவர். ஏங்கெல்ஸ் சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிட்டுள்ளது குறித்து எதுவுமே சொல்லமாட்டார்கள் கள்ள மௌனம் சாதிப்பர். ஏனேனில் அங்கு சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிடுவது முதலாளித்துவ அரசில் பங்கெடுப்பதைத்தான். அதையே சோசலிசத்துக்கான பாதையாக கொள்வதைத்தான் ஏங்கெல்ஸ் குத்திக் காட்டுகிறார். இந்த அம்சத்தில் லெனின் கீழே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சுதந்திர மக்கள் அரசு என்பது 1870-80 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளது வேலை திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாய் அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்ட முழக்கமாயிருந்தது(note: இங்கு CPMயை ஒப்பிட்டு கொள்ளவும்). இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாத பாணியில் சித்தரிக்கிறதென்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறுதும் இல்லாததே ஆகும். சட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாய் அது ஜனநாயக குடியரசை குறித்தவரை "சிறிது காலத்துக்கு' அதைக் கையாளுவதில் நியாயமுண்டு என்பதை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனேனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகூட்டி மினுக்கச் செய்வதுடன் நின்றுவிடுவதில்லை. பொதுவாய் அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடுகிறது."

இங்கு வெகு தெளிவாக CPM கட்சியினரின் துரோக நடத்தையை லெனின் தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு உண்மையான ஜனநாயக குடியரசாய இருக்கின்ற பட்சத்தில்தான் லெனின் அதில் சிறிது காலத்துக்கு அதுவும் கிளர்ச்சியை முன்னிட்டு(ஏங்கெல்ஸ் மேற்கோள்) பங்கெடுக்கலாம் என்கிறார். ஆனால் இந்தியாவிலோ குறைந்த பட்ச ஜனநாயக அரசு கூட இல்லை. இதையே சோசலிசத்துக்கான பாதை என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றுவதுடன் இந்திய பிற்போக்கு அதிகாரவர்க்க தரகு அரசை மெருகூட்டி மினுக்க செய்யும் வேலையை தமது வாழ்நாள் கடைமையாக சோம்நாத் சாட்டர்சியும் இன்ன பிற CPM பாசிஸ்டுகளும் ஏற்றுள்ளனர்.

லெனின் மேலும் கூறுகிறார்:
"ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலியடைமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறதென்பதை மறக்க நமக்கு உரிமையில்லை".

நாம் மறப்பதில்லை. ஏனேனில் அவர் சொல்கின்ற 'நாம்' லிஸ்டில் நாங்கள் இருக்கின்றோம். மேவாவில் ஸ்டைரைக் செய்யக் கூடாது என்று சொன்ன CPM யாருடைய லிஸ்டில் சேரும் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

முதலாளித்துவ அரசை உள்ளிருந்தே அப்படியே மாற்றி சோசலிச புரட்சி கொண்டு வந்துவிட முடியுமா? இப்படித்தான் CPM சொல்கிறது ஏதோ புதிய விசயம் போல. மாறாக ஏங்கெல்ஸ் உள்ளிட்ட மார்க்ஸிய ஆசான்கள் வெகு தெளிவாக சோசலிச அரசுக்கு முந்தைய அரசு பலாத்காரத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் ஏனேனில் அவையெல்லாம் இதற்க்கு முந்தைய புரட்சிகளினால் மேலும் மேலும்வலுவாக்கப்பட்டு வந்த அதிகாரத்துவ அரசுகள் எனவே அவை தூக்கியெறியப்பட்டு அதன் அதிகாரத்துவ அம்சங்கள் நீக்கப்பட்ட முற்றிலும் 'உலர்ந்து உதிரும்' தன்மை கொண்ட சோசலிச அரசு அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

திரிபுவாதிகள் ஏற்கனவே மார்க்ஸ் ஏங்கெல்சை திரித்தது போதும் இனிமேலும் அதை அனுமதிக்க முடியாது என்று லெனின் இந்த விசயத்தை மிக தெளிவாக சொல்லிவிடுகிறார்:

"பலாத்கார புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாத".

மேலும் லெனின் சொல்கிறார்:
"பலாத்கார புரட்சியைப் போற்றும் இந்த புகழ்மாலையை எங்கெல்ஸ் 1878க்கும் 1894க்கும் இடையில் - அதாவது அவர் இறக்கும் தருணம் வரையில் - ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனதுக்கு ஒயாது கொண்டு வந்த வண்ணமிருந்தார். இதனையும் அரசு 'உலர்ந்து உதிரும்' தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?

வழக்கமாய் கதம்பத் தேர்வுவாத வழியில் முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த் தான் தோன்றித்தனமாய் கொள்கை கோட்பாடின்றி அல்லது குதர்க்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன
."

இங்கே வெகு குறிப்பாக அரசு உலர்ந்து உதிர்வது குறித்தான தத்துவமும், பலாத்கார புரட்சி குறித்த தத்துவம் ஒன்றையொன்று இயங்கியல் ரீதியாக சார்ந்தே உள்ளன என்பதையும் அவை கால வரிசைப்படி அதாவது காலையில் பல் தேய்த்தவுடன் சாப்பிடுவது (தேவைப்பட்டால் பல் தேய்க்கமாலேயே சாப்பிடலாம் தோழர்) என்பது போன்று தேர்வுவாத முறையிலான விசயமல்ல என்பதைத்தான் வலியுறுத்துகிறார் லெனின். இந்த வேலையை அதாவது தேர்வுவாத முறையை கை கொண்டிருப்பது பாசிஸ்டு CPM கும்பல்தான்.

"சந்தர்ப்பவாத முறையில் மார்க்ஸியத்தை புரட்டிப் பொய்யாக்குவதில், இயக்கவியலுக்குப் பதிலாய்த் தேர்வுவாதத்தைக் கைகொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது" - லெனின

மேலேயுள்ள இந்த வரிகள் சந்திப்பு போன்ற பாவபட்ட பலியாடுகளுக்கு(கறுப்பு ஆடு என்று நான் சொல்லவில்லை).

குறிப்பாக இந்த கட்டுரையில் உடனடியாக சோசலிச புரட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மார்க்ஸிய பெருந்தகை பிரபாத் சொல்லியுள்ளார் அதை சந்திப்பு வழிமொழிந்துள்ளார். இவர்கள் எல்லாம் தயவு செய்து லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். ஏனேனில் மாவொயிஸம் என்கிற சொல் பதத்தை எந்த அம்சத்தில் இவர்கள் விமர்சிக்கிறார்களோ அதே அம்சத்தில் லெனினிசத்தில் இவர்கள் செய்யும் திரிபு உள்ளது. (இவர்கள் அந்த தத்துவத்தை விமர்சிக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். திரிபுவாதிகள் சொன்னதை விட்டு சுரையை பிடுங்குவதில் சூரர்கள். எனவேதான் மாவொயிசம் என்று பெயர் வைத்ததில் உள்ள நொல்லை நொட்டைகளை ஆய்வு செய்பவர்கள் அந்த தத்துவம் குறித்து எந்த பதிலும் சொல்வதில்லை).

லெனின் ருஸ்ய புரட்சியை சோசலிச உலக புரட்சியின் இணைப்பு என்கிறார். அதாவது அவரது வரையறைப்படி ஏகாதிபத்தியம் அல்லது முதலாளித்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தின் இறுதி மூச்சுக்கு பயணிக்கும், புரட்சிகளின் காலகட்டம் ருஸ்ய புரட்சியிலிருந்து ஆரம்பித்து விட்டது என்பதுதான். அதாவது இந்த வரலாற்று காலகட்டம் என்பது சோசலிச புரட்சிகளின் கட்டம் என்பதுதான். அதாவது அல்ரெடி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விசயம். லெனினிசம் என்பதின் அர்த்தம் இதுதான். லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பவர்கள் சோசலிச புரட்சி இப்போ தேவையில்லை என்பது விந்தையானதல்ல ஏனேனில் சொல்வது பாசிஸ்டு திரிபுவாதிகள் அல்லவா(இங்கு இந்தியா போன்ற ஜனநாயக புரட்சி நடைபெறாதா நாடுகளில் சோசலிச புரட்சியின் தன்மை என்னவாக இருக்கும் என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை).

தேர்தல் குறித்து ஏங்கெல்ஸ்:(அரசும் புரட்சியும் - அத்தியாயம் 1, 3. அரசு-ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி)

"அனைத்து மக்களின் வாக்குரிமை, "தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்க்கு மேல் எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது""


தேர்தல் குறித்து லெனின்:(மேலேயுள்ள வரிக்கு அடுத்த வரிகளில்)

"நம்முடைய சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியினரையும் மென்ஸிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளீத்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக-தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்க்கு மேற்பட்ட ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். 'இன்றைய அரசில்' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர"

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் என்பது போல மார்க்ஸியத்தை வெட்டி குறுக்கி சிதைத்து கடைசியில் பாசிஸ்டுகளாக நிற்கும் CPM தான் மக்களுக்கு அடிமைத்தனத்தை மேலே லெனின் சொன்னது போல ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் கொள்கை புத்தகத்தில் சொல்லியுள்ளது போல புரட்சிதான்(அவர்களது மக்கள் சனநாயக புரட்சி) வருகிற பாட்ட காணோம்.

சரி இதையெல்லாம் விட சூப்பராக இந்த துரோகிகளை பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த சில விசயங்களை சொல்லிச் சென்றுள்ளனர் நமது மார்க்ஸிய ஆசான்கள்.

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அதே புத்தகம், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)

அய்யா அதிமேதாவிகளே, மார்க்ஸியத்தின் ஆணி வேருன்னு ஒன்ன சொல்லிறுக்குறாரே அவர நக்ஸ்ல்பாரின்னு CPM கும்பல் முத்திரை குத்தும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அதை அவர் செய்யும் முன்பாகவே நாஙக செய்ய விரும்புகிறோம். லெனின் சொன்ன மாதிரி பிரச்சாரம், கிளர்ச்சியை கைவிட்ட துரோகிகள் யாருங்கறத காமரேடு சந்திப்பின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்புட்டுதாம்பா.....


அசுரன்.

No comments:

Post a Comment