Tuesday, January 13, 2009

"போலி (கம்யூனிஸ்டு) கள்...” தளத்திற்கான தேவை பற்றி......


மதிப்பிற்குரிய தோழர்களே! நண்பர்களே!!

”சமூகத்தில் விவாதிக்க வேண்டிய, விமர்சிக்க வேண்டிய, எதிர்த்துப் போராட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும்போது, பாவம்... போயும் போயும் இந்த சிபிஎம், சிபிஐ கட்சிகளையா தொடர்ந்து விமர்சிப்பது.....” என்று சிலர் கேட்கின்றனர். இது விவாதங்களைப் புதிதாகப் பார்க்கும் அல்லது பொதுப்புத்தியிலிருந்து நோக்கும் சாதாரணர்களின் கேள்வி.

“சிபிஎம் ஐ நக்கிப் பிழைப்பது...” என்று தமது அரசியலை விமர்சிப்பவர்களை நோக்கித் தமது வசைகளை வீசும் ‘அறிவுஜீவி’த்தனம் சிபிஎம் கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கே உரியது! இது வேறொரு ரகம்.

எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் தமது புரட்சிகர போராட்டங்களுக்குத் தடையாக இருக்கும் அரசியல், சமூக, கலாச்சார அமைப்புகளையும் பிரச்சினைகளையும் சமரசமின்றி எதிர்த்தாலொழிய புரட்சியை நோக்கிச் செல்ல முடியாது. அதனால், சமூகத்தைப் பின்னுக்கிழிக்கும் சக்திகளை, திரிபுவாதிகளை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப் படுத்தும் நோக்கில் வேலை செய்வதுதான் புரட்சிகர அணிகளின் கடமையாக இருக்கிறது.

சமரச வாதமே தமது கொள்கையாகக் கொண்டு, பிழைப்புவாதத்தையே நடைமுறையாகக் கொண்டு புரட்சிகர அரசியலைச் சீரழிக்கும் கும்பல்தான் இந்தப் போலிகள். 

சாமானிய மக்கள் கூட அருவெறுத்து ஒதுக்கும் அரசியல் இழிநிலைகளைத் தூக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்யும் இக்கும்பல், தேர்தலுக்குத் தேர்தல் அணிகள் மாறி மக்கள் மத்தியில் மிச்சமிதியிருந்த செல்வாக்கையும் இழந்து கொண்டிருக்கும் இக்கூட்டத்தை விமர்சிக்கவே கூடாது என்று   யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

நாம் விமர்சித்து அவர்களைத் திரைகிழிப்பதைவிட, நமது விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் செய்கின்ற எதிர்வினைகளிலேயே மேன்மேலும் கேவலமாக அம்பலமாகிறார்கள். (அதனை வாசகர்கள் கண்டுகளிக்க சுட்டிகள்... http://santhipu.blogspot.com/
இதைத்தான் ‘சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது...’ என்பார்கள் போலும்!

இனி இத்தளம் போலிகளின் அரசியல் குறித்து வருகின்ற விமர்சனங்களின் தொகுப்பாக தனது பதிவுகளை வெளியிடும். எதிர்கருத்துக்களை எந்த வித இருட்டடிப்புகளுமின்றி நேர்மையாக வெளியிடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன்.

நன்றி!

- கலைவேந்தன்.






No comments:

Post a Comment